Iphone 16 Pro Max-யில் உள்ள அட்டகாசமான Features! இணையத்தில் வைரல்

ஒவ்வொரு iphone வெளியாகும் முன்பும் அதுக்குறித்து இணையத்தில் வெளியாகும் தகவல்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்யும். அந்த வகையில் ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்பினில் உள்ளது iphone 16 pro max தான்.

இது launch ஆக 6 மாதங்கள் உள்ள நிலையிலும் இதில் என்னென்ன featrures இருக்கிறது என்பதை அறிய செல்போன் பிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது லீக் ஆகியுள்ள தகவல்களின்படி, இதில் ‘Capture Button’, புதிதாக வடிவமைக்கப்பட்ட கேமிரா ஆகிய அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை எந்த iphone-யிலும் இல்லாத நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி செயல்திறன் இதில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்பு உள்ள iphone-கள் 29 மணிநேரம் சார்ஜ் நிற்கும். ஆனால் தற்போது வெளியாக உள்ள iphone 16 pro max 30 மணிநேரம் வரை தாங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதன் screen 6.1 இன்ச்-யில் இருந்து 6.3 ஆக அதிகரிப்பதன் மூலம், optical zoom திறன் அதிகரிக்கும் என்ற தகவலும் பரவுகிறது.

இந்த கூற்றுகள் அனைத்தும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வெளியான பின்னே உண்மையா என்று தெரிய வரும்.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!