அதிமுகவுடன் கூட்டணி! 6ல் 2 கேட்டு பிடிவாதம்

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட SDPI கட்சி முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்பரமாக செயல்பட்டு வருகின்றன. இதில், பாஜகவை விட்டு அதிமுக பிரிந்துள்ளதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் மற்ற கட்சிகளை தங்கள் கூட்டணியில் இழுக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து SDPI கட்சி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, ஈரோடு, பொள்ளாச்சி, மத்திய சென்னை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகளில், ஏதேனும் 2 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க SDPI கட்சி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!