இலங்கை போக்குவரத்து சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்து சபையின் 107 டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், பேருந்து சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துநர்களுக்கு 8 மாதங்களுக்கு மேலாகியும் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

திறைசேரி மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெறும் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளினால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இ.போ.ச தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் 4,700 பேருந்துகள் நாளாந்தம் இயங்குவதுடன் 80 மில்லியனுக்கும் அதிகமான நாளாந்த வருமானம் பெற்றுக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!