தமிழ்நாடு முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது!

தமிழ்நாடு முழுவதும் இன்று(மார்ச் 1) 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 3,300 மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 72,000 மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 40 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில், மொத்தம் 14,688 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

சமீபகாலமாக 12ம் வகுப்பு தேர்வுகள் எழுதாமல் மாணவர்கள் ஆப்செண்ட் ஆகி வருகின்றனர். இது கடந்த ஆண்டு அதிகமாக இருந்தது. இதனால், இதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக கொண்டு வந்தது. இது பலன் கொடுத்திருக்கிறதா என்பது தேர்வுகள் முடிந்த பின்புதான் தெரியும்.

மார்ச் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 43,200 தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்வை அச்சமின்றி நல்ல முறையில் எழுத, மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!