திடீரென நடுவானில் வெடித்த விமானம் கதவு

திடீரென்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்த சம்பவத்தை அடுத்து மொத்தமாக 170 விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 170 போயிங் 737 MAX 9 விமானங்களை உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

சில போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்கள் சேவையை தொடங்கும் முன்னர் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கோரியுள்ளதாகவும் அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 171 விமானங்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும், ஒரு விமானமானது விரிவான சோதனைக்கு உட்படுத்த 4 முதல் 8 மணி நேரமாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!