பக்கவாதத்தை ஏற்படுத்தும் காற்று மாசு! எச்சரிக்கும் ஆய்வு

அதிகப்படியான காற்று மாசினால் பக்கவாதம் ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகராக டெல்லி உள்ளது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதன்படி, நாட்டிலேயே டெல்லியில் தான் மிக அதிகபட்சமாக காற்று மிக மோசமான தரத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குளிர்காலத்தில் மூளை மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ரத்தத்தை சுமந்து செல்லும் நரம்புகள் சுருக்கமடையும்.

இதனால் போதுமான அளவுக்கு ரத்த ஓட்டம் இருக்காது.

இதன் காரணமாக, ரத்த அழுத்தம் உடலில் அதிகரிப்பதால் பக்கவாதம் ஏற்படலாம் என்று ஆய்வு கூறுகிறது.

அத்துடன் வாகனங்கள், வீட்டில் பயன்படுத்தும் எரிபொருள், நம்மை சுற்றியுள்ள தொழிற்சாலைகள், ஆலைகள் போன்றவற்றால் காற்று மாசுபடுகிறது.

இதனால் நைட்ரஜன் ஆக்ஸைடு கலந்த காற்றை நாம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டு பக்கவாதம் உண்டாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

காட்டுத் தீ அல்லது சுற்றுப்புற பகுதிகளில் பற்றும் தீ போன்றவற்றால் எழும் புகை போன்றவற்றாலும் பக்கவாதம் ஏற்படலாம்.

மேலும் இவற்றால் நமக்கு இதய நோய் முதல் பல்வேறு வகையிலான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

நம் ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு மாசடைந்த காற்றை சுவாசிப்பது வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

அதாவது, நுண்ணிய மாசு பொருட்கள் போன்றவை, சுவாசத்தின் வழியாக நம் உடலில் புகுந்து மூளைக்கு செல்கிற ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறது இந்த ஆய்வு.

தடுக்கும் வழிகள்:

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லலாம்.

ஒருநாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் இந்த விடயத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!