அதிமுக, பாஜக இணைய வாய்ப்பே இல்லை! கிருஷ்ணசாமி

அதிமுக, பாஜக மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுக, பாஜக எப்படியும் கூட்டணி சேர்ந்துவிடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

அதிமுக, பாஜகவை இணைக்கும் முயற்சியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி, “அதிமுகவும், பாஜகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், இரு கட்சிகள் இடையே விரிசல் அதிகரித்துவிட்டது. இரண்டு பேருமே வட துருவம், தென் துருவம் போல் உள்ளன.

இதனால், அதிமுக, பாஜக மீண்டும் இணைய வாய்ப்புகள் இல்லை. தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது” என தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!