கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆப்கான் ஆறுதல் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

தம்புல்லாவில் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் ஆடியது.

அதிரடியில் மிரட்டிய ஸஸாய் 22 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் விளாசினார்.

அதன் பின்னர் வந்த கேப்டன் ஜட்ரான் 10 ரன்களில் வெளியேற, அரைசதம் விளாசிய குர்பாஸ் 43 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஓமர்சாய் 31 ரன்களும், நபி மற்றும் இஷாக் தலா 16 ரன்களும் விளாச, ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் (16), குசால் பெரேரா (0), ஹசரங்கா (13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சமரவிக்ரமா 23 ரங்களில் வெளியேற, ஏஞ்சலோ மேத்யூஸை 4 ரன்னில் நபி வெளியேற்றினார்.

ஆனாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிசங்கா 30 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து retd hurt முறையில் பாதியில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி வரை கமிந்து மெண்டிஸ் போராடியும் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியுற்றது. அவர் 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!