அமீரகத்திற்கு மரண அடி கொடுத்து தொடரை வென்ற ஆப்கான்!

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடந்தது.

கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் மோதின.

முதலில் ஆடிய அமீரக அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது வசீம் 27 ரன்களும்இ அலி நசீர் 21 ரன்களும் எடுத்தனர்.

மிரட்டலாக பந்துவீசிய நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளும், கியாஸ் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ஸஸாய் 36 ரன்களும், குர்பாஸ் 20 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த கேப்டன், ப்ராஹிம் 23 ரன்களும், நஜிபுல்லா ஜட்ரான் 28 (13) ரன்களும் எடுத்ததன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவரில் 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நவீன் உல் ஹக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!