ரூ.80,000 கோடியுடன் களமிறங்கும் அதானி குழுமம்!

பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றிகரமாக தொழில் செய்து வரும் அதானி குழுமம் 2025ஆம் நிதியாண்டில் மெகா திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

2025 ஆம் நிதியாண்டில் தொழில்களை விரிவுபடுத்த அதானி குழுமம் கிட்டத்தட்ட 80,000 கோடி ரூபாயை தயாராக வைத்துள்ளது. 2024 – 2025 ஆம் நிதியாண்டில் அதானி குழுமம் பெருமளவில் விமான நிலையம் சார்ந்த திட்ட பணிகளுக்காகவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கான மூலதனச் செலவினமாக 80,000 கோடி ரூபாயை தயாராக வைத்திருக்கிறது என அதானி குழுமத்தின் துணை நிதி அதிகாரியான சௌரப் ஷா தெரிவித்துள்ளார். “2025ஆம் நிதியாண்டில் எங்களது நிறுவனம் 80,000 கோடியை மூலதனச் செலவினமாக எடுத்து வைத்துள்ளது.

இதில் பெரும் அளவிலான தொகை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கும் விமான நிலையம் சார்ந்த தொழில்களுக்கும் செலவு செய்யப்பட இருக்கிறது” என கூறியுள்ளார். சோலார் பேனல்களை தயாரித்து அதன் மூலம் மின்சாரம் மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தத் திட்டத்திற்காகவும் விமான நிலையம் சார்ந்த தங்களது திட்டப் பணிகளுக்காகவும் 50,000 கோடி ரூபாயை தயாராக வைத்திருக்கிறது. இதனை அடுத்து சாலை பணிகள், குறிப்பாக கங்கா எக்ஸ்பிரஸ்வே பணிகளுக்காக 12,000 கோடி ரூபாயை செலவிட இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள தொகை மற்ற தொழில்களுக்கு பிரித்து முதலீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆனந்த் அம்பானியின் மிரளவைக்கும் வாட்ச் கலெக்சன்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பிசோஸ் மீண்டும் முதலிடம்

மார்ச் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு வரும் நல்ல செய்தி?