நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழில் போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் மாணிக்யா, மலையாளத்தில் கசபா ஆடிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் 4 மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

விஷாலுடன் மத கஜ ராஜா படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். அதன் பின்னர் அவர்கள் இருவர் குறித்தும் பல தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவர்கள் இருவரும் 14 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விரைவில் வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!