42 வயதில் தனுஷ் பட நடிகைக்கு திருமணம் முடிந்தது!

தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்திருந்த நடிகை லீனாவுக்கு திருமணம் முடிந்துள்ளது.

தமிழில் ‘அனேகன்’, ‘கடாரம் கொண்டான்’, ‘O2’உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை லீனா(42). இவர் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2004ல் மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், 2013ல் அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து பெற்றோருடன் வசித்து வந்தநிலையில், தற்போது பிரசாந்த் பாலகிருஷ்ணன் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இவர்களின் திருமணம் கடந்த ஜனவரி மாதமே நடந்துள்ளது. ஆனால், இப்போதுதான் லீனா அறிவித்துள்ளார். லீனாவின் கணவர் ஒரு விண்வெளி வீரர் ஆவார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!