ஷாருக்கான் போல நீலாங்கரை வீட்டில் மாஸ் காட்டிய விஜய்!

விஜய் படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வந்தால் மட்டுமே நடிகர் விஜய்யை காண முடியும் என்கிற சூழல் இருந்து வந்த நிலையில், தற்போது அது எல்லாம் மாறி அடிக்கடி ஆஃப் ஸ்கிரீனில் நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறார் என்பதே ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயமாக உள்ளது.

கடந்த மாதம் ஜூன் 28-ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தேர்வு செய்து பரிசுகளை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வழங்கினார்.

அதன் இரண்டாம் கட்ட கல்வி விருது விழா கடந்த ஜூலை 3ம் தேதி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கி அவர்களுடன் நேரத்தையும் செலவிட்டார். இந்நிலையில், தளபதி விஜய்யை காண ரசிகர்கள் அவரது வீட்டுக்கு முன்பாக குவிந்திருந்த நிலையில், ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் செய்த செயல் வீடியோவாக தற்போது டிரெண்டாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டின் மாடியில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவிப்பார். தற்போது அதே போல நடிகர் விஜய் நேற்று 9 மணி நேர நிகழ்ச்சிக்குப் பிறகு எப்படியாவது விஜய் வீடு திரும்பியதும் அவரை சந்தித்தாக வேண்டும் என காத்துக் கிடந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என நினைத்து நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததும் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார். அதன் வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!