நடிகர் மாதவன் திருமணம் செய்ய விரும்பிய நடிகை! அவரே பதில்

தமிழ் சினிமாவின் சாக்லெட் பாயாக இருந்த நடிகர் மாதவன், பிரபல நடிகையை திருமணம் செய்ய விரும்பியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

‘மின்னலே’, ‘அலைபாயுதே’, ‘ரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்தவர்தான் நடிகர் மாதவன். தற்போது தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரிடம் பேட்டி ஒன்றில் நடிகை யாரையாவது திருமணம் செய்ய விரும்பினீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், வெளிப்படையாக “ஆம்” என்றார்.

மேலும், “என்னுடைய இளம் வயதில் நடிகை ஜூஹி சாவ்லாவை ரொம்ப பிடிக்கும். அவரை திருமணம்கூட செய்ய விரும்பினேன். இதை நான் என் அம்மாவிடமே தெரிவித்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிலைக் கண்டு ரசிகர்கள் பலரும் ஜூஹி சாவ்லாவை இணையத்தில் தேட தொடங்கிவிட்டனர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!