நடிகர் அருள்மணி காலமானார்!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்மணி. நடிப்பு மட்டுமின்றி அரசியல் மற்றும் இயக்குநர் பயிற்சிபள்ளி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அருள்மணி. அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள அருள்மணி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், பிரசாரத்திற்கு இடையில் ஓய்வு எடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்தார்.

 

 

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!