இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது.

காற்றின் தரம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நுவரெலியாவை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களின் காற்றின் தரம் மோசமாகவே உள்ளன.

கொழும்பு, கண்டியில் உள்ள அக்குரணை, யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட அளவு மாசு பதிவாகியுள்ளது.

மேலும், கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, குநாகல், கண்டி, மாத்தளை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காற்றின் தரம் அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை உள்ளவர்கள், தேவையின்றி இப்பகுதிகளுக்கு வெளியில் செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!