கித்துலே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவர கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக அதே பாடசாலையின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது.
குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளது