10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே 12ஆம் வகுப்பு படித்த மாணவன்!

ஆசிரியர்கள் கவனக்குறைவால் 10ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவன், 12ஆம் வகுப்பு படித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கே மாணவர் ஒருவர் 2022ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
இதில் அவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற தவறினார்.
இதை தொடர்ந்து ஆகத்து மாதம் மறுதேர்வு எழுதியதில் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றார்.
அறிவியல் பாடத்தில் எழுத்துத்தேர்வில் 15 மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களும் மட்டுமே பெற்றார்.
மொத்தம் 40 மதிப்பெண்கள் பெற்றாலும் எழுத்துத்தேர்வில் 20 மதிப்பெண்கள் பெறாததால், அவர் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்தவர் ஆவார்.
இதனை தொடர்ந்து அறிவியலில் 40 மதிப்பெண்கள் எடுத்ததால், தான் தேர்ச்சி பெற்றதாக எண்ணி 11ஆம் வகுப்பு சேர விண்ணப்பித்துள்ளார்.
அந்த சமயம் ஆசிரியர்கள் கவனக்குறைவால் அவர் 11ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இப்போது அவர் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பொதுத்தேர்வு வருவதால் மாணவர்களின் சான்றிதழ்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதில் இந்த மாணவரின் சான்றிதழை சரிபார்த்த அதிகாரிகள் நடந்த தவறை கண்டறிந்துள்ளனர்.
10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அந்த மாணவர் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இதனை அறிந்த பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து மாணவனை விடுவித்தனர்.
அவர் மீண்டும் 10ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர், 11ஆம் வகுப்பில் சேர்ந்த பின்னர் தான் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பள்ளியின் ஆசிரியர்களை விசாரித்தனர்.
அதில் ஆசிரியர்களின் கவனக்குறைவால் இத்தகைய தவறு நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

1 comment

தோழிகள் பேச்சைக் கேட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! - Namthesam Tamil News December 1, 2023 - 3:05 pm
[…] அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அருகே ஒரு […]
Add Comment