தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தியால் தாக்குதல்..

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பூசன் நகரில் வைத்தே கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாக்குதலை நடத்திய 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட நபரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கையொப்பம் பெறுவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவரை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2022 ஜனாதிபதித் தேர்தலில் வலுவான பங்கு வகித்த லீ ஜே மியாங் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!