அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு சமூகமலித்த மாணவி

நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்றைய தினம் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

உடல்நிலையில் முன்னேற்ற மேற்படாத காரணத்தினால் மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மருத்துவமனை தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறுகிய நேரவிடுப்பு அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து அம்பியூலன்ஸ் மூலமாக பரீட்சை நிலையத்துக்கு காலை அழைத்து செல்லப்பட்டு மருத்துவ தாதியின் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த மாணவி பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்நிலை பாடசாலையில் கல்வி கற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!