83 உயிர்களை பலி வாங்கிய பனிப்புயல்!

அமெரிக்கா வீசும் கடும் பனிப்புயலில் 83 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் குளிர்கால வானிலையால் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வாஷிங்டன், கென்டகி, விஸ்கான்சின், நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய இடங்களில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதுவரை 83 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், சில மரணங்கள் வானிலை தொடர்பானவை என்பதை உறுதிப்படுத்த விசாரணையில் உள்ளன.

கென்டகியில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் இறந்ததாகவும், இல்லினாய்சில் 4 பேர் இறந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மிசிசிப்பி அதிகாரிகள் அதன் குடியிருப்பாளர்களிடம், ”சாலைகளில் கருப்பு பனி பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், தேவைப்பட்டால் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் இந்த வார இறுதியில் ஆபத்தான வானிலை தொடர்ந்தது. வடக்கு புளோரிடா வரை ஆபத்தான காற்று குளிர் மற்றும் கடுமையான உறைபனி நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் Oregon பகுதி அவசரகால நிலையில் உள்ளது. இங்கு, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!