147 ஆண்டுகளில் செய்யாத சாதனை! இந்திய வீரரின் மிரட்டல் பேட்டிங்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டி நடைபெற்றது.

இதில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரோகித்(131), ஜடேஜா(112) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 445 ரன்கள் குவித்தது.

அதன்பின், முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணியில் பென் டக்கட்(153) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால், அந்த அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்(214) மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரை தொடர்ந்து சுப்மன் கில்(91), சர்பிராஸ்கான்(68) என ரன்களை குவித்ததால் இந்திய அணி 430/4 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

அடுத்து 558 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றி மட்டுமின்றி, இந்த தொடரில்(3 போட்டிகளில்) இளம் வீரர் ஜெய்ஸ்வால் மொத்தம் 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பித்த(1877ம் ஆண்டு) 147 ஆண்டுகளில் ஒரு தொடரில் 20 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற மிரட்டல் சாதனையை அவர் படைத்தார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!