பிரித்தானியாவில் வேகமாக பரவும் நோய்! ஒருவர் பலியான சோகம்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக பரவி வரும் மணல்வாரி தொற்றுநோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக உலகின் பல்வேறு நாடுகளில் மணல்வாரி, காசநோய், காலரா, டைபாய்டு, சின்னம்மை நோய்கள் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளன.

அந்த வகையில், பிரித்தானியாவில் மணல்வாரி(Measles) என்ற நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், மக்கள் சற்று பீதியில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த தொற்றுக்கு முதன் முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். ஆனால், அந்த நபர் குறித்த வேறு எந்த விபரமும் வெளியாகவில்லை.

இது பொதுவாக குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என கூறப்படும் நிலையில், வயது வந்த ஒருவர் பலியாகிருப்பது மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிக காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல், இருமல், சிவந்த கண்கள், கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!