சுவிஸ் விமானத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு

ஸ்பெயினில் தரையிறங்கிய சுவிஸ் விமானம் ஒன்றில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

127 பயணிகளுடன் சுவிஸிஸின் Air Jet எனும் விமானம் ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்தது.

பார்சிலோனா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது கதிரியக்க கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டதாக தெரிய வந்தது.

இதனால் உடனடியாக விமான அவசர நிலைகளுக்கான குழுக்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்.

பின்னர் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்குப் பிறகு ‘ஆபத்து இல்லை’ என்பதை சரிபார்த்த பிறகு, எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் எச்சரிக்கை செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், இந்த சிறிய சம்பவத்தினால் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லை என்றும் Aena நிறுவனம் கூறியது.

இதன் காரணமாக பயணிகள் அனைவரும் விமானத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த கசிவு அபாயகரமானதா என்பதைக் கண்டறிய வல்லுநர்கள் இந்தத் தயாரிப்பு அடங்கிய சூட்கேஸை சரிபார்த்து வருகின்றனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!