ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும்..

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் இன்று முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!