உலகளாவிய ரீதியில் தலைவிரித்தாடும் புதிய வகை கொவிட் தொற்று..

2020 ஆம் ஆண்டு உலகையே முடக்கி வைக்கும் ஒரு தொற்று பரவியதை யாராலும் மறக்க முடியாது.

குறித்த வைரஸ் தொற்றானது கொரோனா. கோவிட், கோவிட் 19 எனும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றானது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா, இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது புதிதாக கொரோனா தொற்று ஒன்று பரவி வருகின்றமை உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இதில் எத்தனை பேர் ஜேஎன் 1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனவும் மாநிலத்தில் அதிகளவில் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜேஎன் 1 வகை கொரோனா அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது.

புதிய வகை கொரோனா விரைவாக அல்லது திறம்பட பரவ இந்த மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன.

அப்படி மாற்றம் பெற்றதுதான் ஜேஎன்1. “ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மற்ற வகை கொரோனா வைரஸ்களுடன் புதிய வகை கொரோனாவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம்” என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி (Centres for Disease Control and Prevention) கூறுகிறது.

ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் குறித்து நுரையீரல் நிபுணர் சி. பாஸ்கர கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடுமையான இருமல் மற்றும் சோர்வு என்பன இந்த புதிய வகை கொரோனா தொற்றுக்கான அறிகுறி என கருதப்பட்டுள்ளது.

இந்த அறிகுறிகள் காய்ச்சலில் தான் முதலில் தொடங்குகின்றன. இது நிமோனியா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!