கோவிட் தொற்றின் புதிய திரிபு..

தற்போது பரவும் கோவிட் தொற்றானது வயிற்றை பாதிக்கும் தொற்றாக உருமாறியிருக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

புதிதாக பரவும் JN.1 என்ற கோவிட் திரிபு பொதுவாக சுவாச அமைப்பை சிதைக்கும் கோவிட் தொற்றாக வயிற்றை பாதிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீரில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது JN.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகளில் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறியுள்ளதையும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

மிசோரி பல்கலைக்கழகத்தின் மார்க் ஜான்சன் என்ற நிபுணர் தெரிவிக்கையில், ஐரோப்பாவில் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் பாதிப்பின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாகவும், நிபுணர்கள் தரப்பில் பலர் சாத்தியமான விளக்கங்கள் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 100,000 மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வயிறு தொடர்பான உபாதைகளுடன் எவரும் மருத்துவமனையை நாடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!