97 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம்

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது.

நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகம் பூமியை விட பெரியது என்றும், அதன் வளிமண்டலத்தில் நீர் நிறைந்துள்ளது என்றும் அமெரிக்காவின் நாசா கூறுகிறது.

ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்திருப்பதால், உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கும் இதுபோல் நீர் மூலக்கூறுகளை கொண்ட கிரகங்களை ஒப்பிடுகையில், இந்த புதிய கிரகம் பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மேலும், இந்த கிரகத்தினை GJ 9827 d என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!