புதுவிதமான கின்னஸ் சாதனை

உலகில் பலர் பல்வேறு கின்னஸ் சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஜேர்மனியை சேர்ந்த நபரொருவர் சற்று வித்தியாசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

இவர் ஒரு கப் காபியை இந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் குடித்து கின்னஸ் சாதனையை பதிவு செய்துள்ளார்.

உலகில் பெரும்பாலான மக்கள் காபியை (Coffee) விரும்புகிறார்கள். காபி அதிகமாக குடித்தால் உடல் நலத்திற்கு கேடு விளையும் என்பது அனைவரும் அறிந்ததே.

சிலர் காபியை விரும்பி குடிப்பார்கள், ஆனால் எவ்வளவு விரும்பினாலும் நொடிகளில் மின்னல் வேகத்தில் குடிக்க முடியாது.

இதனடிப்படையில் Felix von Meibom என்ற ஒருவர் மின்னல் வேகத்தில் காபி குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இவர் 3 வினாடிகளில் ஒரே கோப்பையில் காபி முழுவதையும் குடிக்கும் காணொளி எல்லோரையும் வியக்கவைத்துள்ளது.

இந்த சுவாரசியமான பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நான் தினமும் காலையில் இதைச் செய்கிறேன் என்று ஒருவர் நகைச்சுவையாக கூறுகிறார். இன்னொரு பயனர் இதை என்னாலும் செய்ய முடியும் என்றார்.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!