71
மருத்துவ சேவைக்கு உதவி புரிவதற்கான 242 நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மருத்துவ பயிற்சிக்கல்லூரிகளில் இரண்டு ஆண்டுகள் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த 163 பேருக்கும் நேற்று முன்தினம் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 1 வருடம் 3 மாதங்களுக்குள் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 56 சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.