இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு..

இலங்கையில், நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றையதினம் மாலை 5.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. கொத்மலை – பியகம மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே  இந்த மின்தடை ஏற்பட்டது என இலங்கை மின்சார சபை முதலில் அறிவித்தது.
தொடர்ந்து அரை மணி நேரத்தினுள், நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழமைக்கு திருப்பியது. இரவு 7 மணியளவில், கொழும்பு இலங்கை தேசிய மருத்துவமனை உட்பட மருத்துவமனைகள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கான மின்சாரம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த 2021 டிசம்பர்  இல் திடீர் மின் செயலிழப்பு ஏற்பட்டு, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மின்தடைக்கு டிரான்ஸ்மிஷன் லைன் செயலிழப்பே காரணம் என்று அரசாங்கம் முதலில் தெரிவித்திருந்தது. மின் தடைக்கான காரணங்களை ஆராய்வதற்காக, அந்த நேரத்தில் மின்சார சபையால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  ஆரம்பித்திருந்தது.
மின்தடை ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் குறித்த குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில்,
நடைமுறைகளைப் பேணுவதில் மின்சார சபை தவறியத , முந்தைய விசாரணை அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்றாததில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைபாடுகள் ஆகிய காரணங்களால் மின்வெட்டு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!