இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெளத்த துறவி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள டயானா கமகே தலையை மொட்டையடிக்க தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை இந்திய நட்புறவுக்காக இந்திய மிருத்த திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்பட்ட பௌத்த கருப்பொருளைக் கொண்ட ஒரு உன்னதமான திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமான பெளத்த துறவியாக டயானா கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டயானா கமகே குறித்த படத்தில் நடிக்க இந்திய திரைப்பட இயக்குனரின் அழைப்பை மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.