நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்! 69 பேர் பலி

நேபாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரமிதண்டா கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 69 பேர் பலியானதாக அறியப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நேபாள பிரதமர் “புஷ்பா கமல் தஹல்” நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மனித உயிர் மற்றும் உடல் சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!