சீனாவில் கோர தாண்டவமாடிய நிலநடுக்கம்! 148 பேர் பலி..

Rescue workers search a house for survivors after an earthquake in Kangdiao village, Dahejia, Jishishan County, in northwest China's Gansu province on December 19, 2023. At least 111 people were killed when an earthquake collapsed buildings in northwest China, state media reported on December 19, as rescue workers raced to start digging through rubble. (Photo by AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)

சீனாவின் இரு மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Gansu, Qinghai மாகாணங்களில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு முன் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் இது 6.2 புள்ளிகளாக பதிவானதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

நிலநடுக்கத்தின் இந்த கோர தாண்டவத்தில் 148 பேர் பலியாகியுள்ளனர். Gansu-வில் 117 பேரும், Qinghai–யில் 31 பேரும் பலியானதாகவும் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததுடன், 1000க்கும் மேற்பட்டோர் இரு மாகாணங்களிலும் காயமடைந்தவர்கள்.

அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் 1,39,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ‘மீட்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!