முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்!

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பரவி வரும் நோய்நிலைமைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!