தீடீர் சோதனையில் 4 வாள்களுடன் ஒருவர் கைது..

யாழ். நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது, வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளும் மீட்கப்பட்டன.

உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!