பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

பாணந்துறையில் வீதியொன்றில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் தனியாக பயணிக்கும் பெணின் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது

பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுமார் ஒன்றரை பவுண் கொண்ட 130,000 ரூபா பெறுமதியான தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது.

அருகாமையில் உள்ள மத ஸ்தலத்தில் இருந்து வீடு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி குறித்த பெண்ணின் நகையை கொள்ளையிட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் அருகில் உள்ள நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைகளுடன் பயணிக்கும் பெண்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!