ஹவுதி இலக்குக்கு எதிராக பிரித்தானியா, அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுத் தாக்குதல்

ஹவுதி இலக்குகளுக்கு எதிராக பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முறையாக கூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து, கடந்த 11ஆம் திகதி ஹவுதிக்கு எதிராக முதல் கூட்டுத் தாக்குதலை நடத்தின.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் ஹவுதிக்கு எதிராக இரண்டாவது தாக்குதலுக்கு உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரானுடன் இணைந்த குழுவிற்கு எதிரான சமீபத்திய நடவடிக்கையாக பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இரண்டாவது கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இது அமெரிக்காவால் தொடங்கப்பட்ட 8வது தாக்குதல்,ஆனால் இரண்டாவது கூட்டு முயற்சி என கூறப்படுகிறது.

மேலும், செங்கடல் கப்பல் போக்குவரத்தை இலக்காகக் கொண்ட தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து முந்தைய நாள், தலைவர்கள் இருவரும் தொலைபேசியில் பேசியதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹவுதி தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது மற்றும் உலகளாவிய பணவீக்கம் பற்றிய அச்சம் தூண்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!