16 பவுண் நகையுடன் யாழில் திருட்டுக் கும்பல் கைது!

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 16 பவுண் நகைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு பேர், மன்னாரை சேர்ந்த இரண்டு பேர் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரே காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த திருட்டு சம்பவத்தில், ஐந்தரை இலட்சம் ரூபா பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளன.

திருட்டில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் 19 வயதான நபர் போதைக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைக்கு அடிமையான திருட்டில் ஈடுபட்டவர், நகை அடகு வைத்தவர் மற்றும் நகையை உடமையில் வைத்திருந்தவர்கள் என்ற கற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!