செஸ் போட்டியில் அபார வெற்றியில் பிரக்ஞானந்தா

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரான பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றுள்ளார்.

இந்த போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகின்றது.

உலக சம்பியனான சீனாவைச் சேர்ந்த வீரர் ஜிஎம் டிங் லிரனை தோற்கடித்ததன் மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியனை தோற்கடித்துள்ளார்.

இந்நிலையில் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகளுடனும் உள்ளனர்.

இதன் மூலம் இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடத்திலுள்ளார்.

பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!