அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்ற இலங்கை முன்னாள் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகர்தன் தில்ஷன் அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ளார்.

இதை அவுஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் சிறந்த இலங்கை வீரராக தில்ஷன் கருதப்படுகிறார். 2011 உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் மற்றும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து சாதனையும் படைத்தார். 2014ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் தில்ஷனும் இருந்தார்”என பதிவிட்டுள்ளார்.

மேலும், “அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ளதால், அவர் உள்ளூர்வாசி என்பதன் அடிப்படையில் தனது திறமைகளை அவுஸ்திரேலியாவில் உள்ள உள்ளூர் அணிகளிடம் பகிர்ந்து கொள்வார்” என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!