முன்னாள் பிரதமர் பரோலில் விடுதலை

050919-D-2987S-037 Thailand's Prime Minister Chinnawat Thaksin meets with Secretary of Defense Donald H. Rumsfeld in the Pentagon on Sept. 19, 2005. Thaksin and Rumsfeld are meeting to discuss issues of mutual interest to both nations. DoD photo by Helene C. Stikkel. (Released)

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா சிறையில் இருந்து பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பிரதமராக இருந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இருந்தவர் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra).

இவர் தனது ஆட்சிக்காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் வெளிநாட்டிற்கு தப்பிய இவர், சுமார் 15 ஆண்டுகள் கழித்து தாய்லாந்து திருப்பினார்.

கடந்த ஆண்டு தக்சின் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், தாய்லாந்து மன்னர் Maha Vajiralongkorn அவரது சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக பாங்காக் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட தக்சின், வயது மூப்பு காரணமாக பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம், தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin), நாளை (இன்று) தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்திருந்தார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!