உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் மீன், Grilled சிக்கன்! எப்படி தெரியுமா?

சமீப காலமாக அதிகப்படியான மக்கள் உடல் பருமனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து வரும் நிலையில், சிக்கன் மற்றும் மீன் பெரும் பங்கு வழிப்பதாக தெரிய வந்துள்ளது.

உடல் எடை குறைப்பு என்பது ஒன்றும் அவ்வளவு ஈஸியான வேலை இல்லை. இதற்கு உடற்பயிற்சியும், டயர்ட்டும் ரொம்பவே முக்கியம்.

எனவே, அசைவம் சாப்பிடுவதில் உடல் எடையை அதிகரித்து விடும் என்று சற்று தயக்கமாகவும், பயமாகவும் இருக்கும்.

ஆனால், சிக்கன் மற்றும் மீன் உடல் எடையை குறைக்க உதவுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடுவதைக் காட்டிலும் க்ரில்டு உணவாகச் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்பவே நல்லது.

ஏனென்றால், எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடும்போது அதிக கொழுப்பை நாம் எடுத்துக் கொள்ள நேரிடும்.

அதேநேரம் க்ரில்டு செய்து சாப்பிடும் போது கொழுப்பு குறையும். மேலும், இதில் எண்ணெய் பெரும்பாலும் இருக்காது என்பதால் அதுவும் உடம்பிற்கு நல்லது.

மீன் மற்றும் சிக்கன் உங்கள் உடலுக்கு போதுமான புரதம், ஒமேகா -3 மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்கிறது. ஆனால், இந்த இரண்டிலும் கொழுப்பு இருக்கிறது.

எனவே, உடல் எடையைக் குறைக்க இந்த இரண்டில் எது சிறந்தது என்று பார்த்தால் மீன் பெரும் பங்கு வகிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக மாற மீன் சாப்பிடுவது சரியான தீர்வாக இருக்கும் என்பதை, சமீபத்தில் வெளியான ஜர்னல் நியூட்ரிஷன் ஆய்வு காட்டுகிறது.

மீன் சாப்பிடுவது உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும்.

மற்ற வகை மாமிசங்களைச் சாப்பிடாமல் மீன்களை மட்டும் சாப்பிட்டால் எட்டு வாரங்களில் உடல் எடை கணிசமாகக் குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!