அமெரிக்காவில் தீ விபத்து

அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் எரிந்து அழிந்துள்ளன.

வடக்கு அட்லாண்டிக் ஃப்யூல்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

எரிபொருள் கொள்கலன் வண்டிகள் தீப்பிடித்து எரிந்ததால் ஆபத்து அதிகரித்ததுடன் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால் பிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!