மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை..

அநுராதப்புரத்தில் பதின்மூன்று வயது மகளை தந்தையான துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளின் மனைவி கைது செய்து விசாரித்த பின்னரே பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதபுரத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!