விஜய்க்கு பிரபல இசையமைப்பாளர் கடும் எதிர்ப்பு!

மொழியையே காக்க திரண் இல்லாத நடிகர் விஜய், எப்படி மக்களை காப்பாற்றுவார் என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

‘தமிழக வெற்றி கழகம்’ என நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். இதில் ‘வெற்றி’ வராது ‘வெற்றிக்’ என்று வரும் என தமிழ் அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், விஜய் அதை மாற்றாமல் அதன்பின் வந்த தனது அறிக்கையில், ‘தமிழக வெற்றி கழகம்‘ என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தார்.

இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், “விஜய்யின் அரசியல் கட்சி பெயரில் ஒற்று பிழை உள்ளது. மொழியில் பிழை என பலர் சொல்லும்போதே அவர் சரி செய்திருக்க வேண்டும்.

மொழியை காக்க திரண் இல்லாத விஜய், அந்த மொழி பேசும் இனத்தை எப்படி காக்க முடியும். விஜய் இதை மாற்றிதான் ஆக வேண்டும். ஒரு தமிழனாக முழுக்க, முழுக்க இதை எதிர்ப்பேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!