இரண்டு மகள்களுடன் பலியான பிரபல ஹாலிவுட் நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51), தனது இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் பலியானது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹாலிவுட்டில் The Baby Sitters Club, Valkyrie, The Good German, Speed Racer உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver).

ஜேர்மனியைச் சேர்ந்த இவர் தனது இரண்டு மகள்களுடன் சிறிய ரக விமானம் ஒன்றில் சுற்றுலா மேற்கொண்டார்.

எதிர்பாராத விதமாக இவர்கள் பயணித்த விமானம் பெக்வியாவின் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் விமானி உட்பட 4 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து மீட்புப் படையினரின் உதவியுடன் பொலிசார் ஆலிவர், அவரது இரண்டு மகள்கள் மற்றும் விமானி ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

கிறிஸ்டியன் ஆலிவரின் மரணம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பொலிஸார் கூறுகையில்,

‘ஆலிவர் குடும்பத்தின் சிறிய விமானம் அருகிலுள்ள சிறிய தீவுக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிக்கலை சந்தித்தது.

நான்கு பேரின் உடல்கள் கடலில் இருந்து கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவ பயிற்சியாளரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உடல்கள் கடலோர காவல்படையின் கப்பலில் செயின்ட் வின்சென்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கிங்ஸ்டவுன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!