இங்கிலாந்தில் இரட்டை அடுக்கு பேருந்து எரிந்ததால் பரபரப்பு

இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் விம்பிள்டன் மையப்பகுதியில் சென்றுகொண்டிருந்த மின்சார டபுள் டெக்கர் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தீப்பிடித்தபோது பெரும் சத்தம் எழுந்ததுடன், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

உள்ளூர்வாசியான மேக்ஸ் பாஷ்லே என்பவர், ”பெரிய சத்தம் கேட்டது, நாங்கள் பயந்துபோனோம்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பேருந்து தீப்பற்றியது குறித்து தகவல் அறிந்த லண்டன் தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

லண்டன் தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘இந்த தீ விபத்திற்கான சரியான காரணம் குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை’ என்றார்.

மேலும், Merton காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று காலை விம்பிள்டன் ஹில் ரோடு பகுதியைத் தவிர்க்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துகிறது.

வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு திசைகளிலும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் நெரிசல் ஏற்படும். எனவே விம்பிள்டன் ஹில் ரோடு பகுதியை தவிர்க்கவும்’ என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்து தீப்பிடித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!