மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை..

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை   வழங்கப்படவுள்ளது. 

இந்த டிஜிட்டல் அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிரியல் தகவல்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடையாள அட்டைக்குரிய நபரின் ​​பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.
இத் திட்டத்திற்காக  கணிப்பிடப்பட்டுள்ள தொகையில் 15 வீதம், அதாவது 450 மில்லியன் ரூபா இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதுடன், இந்திய – இலங்கை கூட்டு ஒப்பந்தத்துக்கமைய குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!