கணவரை பார்க்கக்கூடாது என 4 வயது மகனை கொன்ற CEO தாய்

இந்தியாவின் கோவாவில் பெண் CEO ஒருவர், தனது 4 வயது மகனை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் CEO ஆக பணியாற்றி வருபவர் சுசானா சேத் (39).

கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் கருத்து வேறுபாட்டினால் கணவரிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.

அப்போது மகன் சின்மய்யியை ஞாயிறு தோறும் அவரது தந்தை வெங்கட்ராமன் நேரில் சந்தித்து பேசலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது.

ஆனால், தன் கணவர் மகனை சந்திப்பதை சுசானா சேத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுசானா தனது மகனை அழைத்துக் கொண்டு கோவா சென்றுள்ளார். அங்கு விடுதியில் தங்கிய அவர் 3 நாட்களுக்கு பிறகு காரில் பெங்களூரு சென்றுள்ளார்.

ஆனால் அவருடன் மகன் செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், சுசானா தங்கியிருந்த அறையில் சென்று பார்த்தபோது ரத்தக்கறை இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே பொலிஸார் சுசானா சென்ற காரின் ஓட்டுநரை தொடர்புகொண்டு, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு காரை ஓட்டிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதன்படி ஓட்டுநரும் காவல்நிலையத்திற்கு சென்றபோது, பொலிஸார் காரில் சோதனை செய்தனர். அப்போது சூட்கேஸ் ஒன்றில் 4 வயது மகனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சுசானாவை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது மகனை கணவர் சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்தக் கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!